தஞ்சாவூர் : தஞ்சாவூர் கணபதி நகர் உள்ள குரு தேவி ஸ்ரீ ஜானகி மாதா ஆசிரமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாத்ருபூதேஸ்வரர் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், வருகின்ற வியாழக்கிழமை (22ம் தேதி) நடக்கிறது
குருதேவி ஸ்ரீ ஜானகி மாதா ஆசிரமம் தலைவர் டாக்டர் கணபதி ரமணன்,அவரது துணைவியார் சௌமியா ஆகியோர் நிருபர்களிடம் பேசியதாவது:குரு தேவி ஸ்ரீ ஜானகி மாதா 1969 ல் ஜீவ முக்தி அடைந்தார். இவர் 1943ல் தஞ்சை கணபதி நகரில் இயற்கை சூழலில் வாஸ்தலத்தை அமைத்துக் கொண்டார் .1935 ல் ஸ்ரீ ரமண மகரிஷியை பார்க்க சென்றார்.அதன் பிறகு சற்குருவாக ஏற்றுக்கொண்டு ஸ்ரீ அன்னையை பார்த்த பகவான் நீ பிறவியிலே பூரண ஞானி உனக்கு நான் காரணம் குரு அவ்வளவு தான் என்று கூறி கீதையில் இருந்து இரண்டு வரிகளை மேற்கோள் காட்டினார்.பிற்பட்ட ஏரிவர்களுக்கு சேவை செய்து இருக்கிறார் ஸ்ரீ அன்னையின் தேசப்பற்று வியக்கத்தக்கதாகும் எனக் கூறினார்.ஆசிரமத்தில்.இன்று
(20ம் தேதி) மாலை 4.00 மணி முதல் 8:00 மணி வரை முதல் கால பூஜை நடைபெறுகிறது.நாளை(21ம் தேதி) காலை 7:00 மணி முதல் 10.00 மணி வரை இரண்டு கால பூஜை யும் ,மாலை 6.00 மணி முதல் 9 .00 மணி வரை மூன்று கால பூஜையும் நடைபெறுகிறது.வியாழக்கிழமை (22 ஆம் தேதி)ஸ்ரீ பாத்ருபூதேஸ்வரர் அஷ்டாஷர மந்திர ஹோமங்களுடன் நிகழ்ச்சி துவங்கும். காலை 9.49 மணிக்கு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன 5 ம் ஆண்டு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது..தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அன்னதானம் நடக்கும் எனக் கூறினார்