தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் பகுதி ரயில்வே சம்பந்தமான கோரிக்கை மனுவை தமிழக பாரதியஜனதா கட்சியின் மாநில பொது செயலாளர் கருப்பு எம் முருகானந்தம், டெல்லி – தமிழ்நாடு பாஜக பிரிவு மாநில துணைத்தலைவர் கே.ஜி தண்டபாணி, தமிழ்நாடு விவசாயிகள் அணி மாநில தலைவர் எஸ்.ஜி.எம் ரமேஷ் கோவிந்த் ஆகியோர் புது தில்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து கொடுத்தனர்.
அந்த கோரிக்கை மனுவில்:- சென்னை தாம்பரத்திலிருந்து மயிலாடுதுறை- திருவாரூர்- பட்டுக்கோட்டை – வழியாக ராமேஸ்வரத்திற்கு “கம்பன் எக்ஸ்பிரஸ்” தினசரி இரவு நேர விரைவு இரயிலை இயக்க வேண்டும் என்றும்.
மயிலாடுதுறையில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக - காரைக்குடிக்கு "சோழன் இணைப்பு" பயணிகள் இரயில் இயக்க வேண்டும்.
அனைத்து விரைவு ரயில்களும் பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் நின்று செல்ல வேண்டும். தஞ்சாவூரிலிருந்து ஹைதராபாத்துக்கு புதிய விரைவு இரயில் இயக்க வேண்டும்.
அரியலூர் - தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் - புதுக்கோட்டை - மதுரை புதிய ரயில் பாதைகளை விரைவில் அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தஞ்சாவூர் - விழுப்புரம் மற்றும் தஞ்சாவூர் - காரைக்கால் இரட்டை ரயில் பாதைகளை விரைவில் அமைக்க வேண்டும்.
தஞ்சாவூரில் இருந்து பெங்களூர், சென்னைக்கு வந்தே பாரத் விரைவு ரயில்களை இயக்க வேண்டும். திருவாரூர் காரைக்குடி ரயில் பாதையை விரைவில் மின்மயமாக்க வேண்டும். என அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது
ரயில்வே அமைச்சர் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து அவற்றை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.