மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடு வோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க எஸ். பி அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மதுரை புறநகர் பகுதி யைச் சேர்ந்த ஒருவரிடம் பழைய வாகனங்களை குறைந்த விலைக்கு தருவதாக செல்போனில் பேசி ரூ.2,39 லட்சத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய தான புகாரின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் எஸ்.பி அறிவுறுத்தலின் படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பழைய வாகனங்கள் தருவதாக கூறி பண மோசடி செய்தவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சோலையன் என்பவரது மகன் மாணிக்கம் என்பதும் அவர் தற் போது கோவையில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படையினர் மாணிக்கத்தை கைது செய்தனர்.
அவரிடமிருந்து செல் போன், சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில், இவர் திருச்சி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களிலும் கைவரிசை காட்டியிருப்பது தெரிய வந்துள்ளது. அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.