சீர்காழி பகுதியில் மாவட்ட ஆட்சியர் தங்கி உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவருக்கு பாராட்டு :-

தமிழக அரசு மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு களத்திற்கு சென்று உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தினை தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று சீர்காழி பகுதியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் வருகை புரிந்தனர்.

முதலில் காவேரிபூம்பட்டினம் (பூம்புகார் )பகுதிக்கு வருகை புரிந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வரலாற்று சிறப்புமிக்க பூம்புகார் சுற்றுலா தளம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது அந்தப் பணிகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து மணிகிராமம் பகுதியில் பொது விநியோகத் திட்டம் அங்காடி ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து திருவெண்காடு ஊராட்சிக்கு உட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களிடையே கலந்துரையாடினார் பத்தாம் வகுப்பில் நடந்து முடிந்ததேர்தலில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு சால்வை பரிசாகபுத்தகம் வழங்கி மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி மாணவர்களை தேர்ச்சி பெற செய்ய வேண்டும் என ஆசிரியரிடம் தெரிவித்தார். திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையம் ஆய்வு மேற்கொண்டார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியிடம் சிகிச்சையில் தரம் குறித்தும் போதுமான வசதிகள் உள்ளதா என கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து இன்று ஒரு நாள் சீர்காழி பகுதியில் மாவட்ட ஆட்சியர் தங்கி சட்டநாதபுரம், சீர்காழி, தென்பாதி, திட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று நியாய விலை கடை, ஆரம்ப சுகாதார நிலையம், இ சேவை மையம், கூட்டுறவு நகர வங்கி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஆதிதிராவிடர் நல விடுதி, முதியோர் இல்லம், பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதி உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளார். குறிப்பாக இந்த பகுதிகளில் அனைத்து துறை அலுவலர்களும் முகாமிட்டு பொதுமக்களின் கோரிக்கைகளை நேரில் பெற்று அரசு விதி முறைகளுக்கு உட்பட்டு தனிக்கவனம் செலுத்தி உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்பதே ஆகும் எனவே சீர்காழி பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களை தேடி வரும் அலுவலர்களை சந்தித்து தங்களுக்கு உண்டான குறைகளை தெரிவித்து உடனடி தீர்வை தேடி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்த பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *