விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் வட்டம் மற்றும் நகரம், ஶ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் வளாகத்தில் வைத்து, மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தின் நீதியரசர் கே. ஜெயகுமார் தலைமையில், விருதுநகர் (இருப்பு) ஶ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்
ஆணையத்தின் தலைவர், எஸ். ஜெ. சக்கரவர்த்தி முன்னிலையில், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் மாநிலத் தலைவர், சி. சுப்பிரமணியம் மற்றும் ஶ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலை எண்.744 (அலகு – 3) (நில எடுப்பு) தனி வட்டாட்சியர், திரு.எம். ரங்கசாமி மற்றும் ஶ்ரீவில்லிபுத்தூர் விதைகள் சிலம்பம் தன்னார்வு அமைப்பின் தலைவர், சுரேஷ் ஆகியோர் ஒருங்கிணைப்புடன், ஶ்ரீவில்லிபுத்தூர் அரசு கலைக் கல்லூரி தேசிய சமூக உதவித் திட்டம் – 42 மாணவ / மாணவியர்கள் ஒத்துழைப்புடன், ராஜபாளையம்
” EVERGREEN GROWTH SOLUTIONS TRUST ” நிதிப் பங்களிப்புடன்,
78 – வது சுதந்திர தின விழாவினைப் போற்றுதல் மற்றும் சுற்றுச் சூழலினைப் பாதுகாத்தல் முன்னிட்டு, நாவல், மாதுளை, கொய்யா, சப்போட்டா, வாதாம்
சிறிய நெல்லி மற்றும் பெரிய நெல்லி உள்ளிட்ட 42 பழ மரக்கன்றுகள் நடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மாணவ / மாணவியர்களுக்கு
நுகர்வோர் பாதுகாப்பு, சமுதாயத்தில் நுகர்வோரின் கடமை, நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் மூலம் தீர்வு காணுதல் மற்றும் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதனால் அடையும் பயன்கள் உள்ளிட்ட விபரங்கள் குறித்து முழுமையாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.