இந்திய அரசியலமைப்பு விதி 169 சட்ட மேலவை( விதான் பரிஷத்) குறித்து கூறுகிறது..தமிழகத்தில் 1,நவம்பர் 1986 ல் சட்ட மேலவை நீக்கபட்டது. தற்போது கர்நாடகா,ஆந்திரா,மகாராஷ்டிரா,தெலுங்கானா,உத்திரபிரதேசம்,பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் சட்ட மேலவை தற்போது நடைமுறையில் உள்ளது.. திமுக தேர்தல் அறிக்கையில் சட்ட மேலவை அமைக்கபடும் என்று அறிவித்திருந்தது.
ஆனால் அரசு அமைந்து இருஆண்டுகள் முடியும் நிலையில் இது வரை சட்ட மேலவை குறித்த அறிவிப்பு குறித்து எந்த தகவலும் வெளியிடபட வில்லை..தமிழகத்தில் 78 பேர் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கபட வாய்ப்பு உள்ளது..மூதறிஞர் இராஜாஜி,அறிஞர் அண்ணா ஆகியோர் சட்ட மேலவை மூலமே முதல்வர் பதவிவகித்தனர் என்பது கடந்த கால வரலாறு…சட்ட மேலவை அமைக்க பட்டால் பட்டதாரிகள்,ஆசிரியர்கள்,கல்வியாளர்கள் ,மற்றும் அறிவுஜீவிகளுக்கும் MLC க்கான வாய்ப்பு கிட்டும்..நிதிநிலையைகாரணமாக பெரிதும் கொள்ளாமல் மற்ற சில மாநிலங்களில் உள்ளது போல் சட்ட மேலவை அமைக்க விரைந்து பரிசீலனை செய்ய அரசு முன்வர வேண்டும் என திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி மரத்தடி மையம் சார்பில் வேண்டுகிறோம்.