உலகத் தொழில் முனைவோர் தினத்தை முன்னிட்டு அறிஞர் அண்ணா கல்லூரியில் கல்லூரிச் சந்தை.
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலகத் தொழில் முனைவோர் தினத்தை முன்னிட்டு கல்லூரிச் சந்தை 3 நாட்கள் நடைபெற்று செய்கின்றன .
அதைத்தொடர்ந்து 21/8/2024 புதன் கிழமை அன்று துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் வணிகவியல் துறை தலைவர் மற்றும் தொழில் முனைவோர் ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா . குமரேசன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் சு.தனபால் அவர்கள் தலைமை தாங்கினார். தங்களுடைய தலைமை உரையில்,மாணவ மாணவியர் படிக்கும் பொழுதே பல்வேறு சிறு தொழில்களை கற்று உற்பத்திச் செய்து சிறந்த தொழில் முனைவராக திகழ்தல் வேண்டும். நமது நாட்டின் பாரம்பரிய பொருள்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதைப் பாதுகாத்தல் வேண்டும் என்று பேசினார்.
தொழில் முனைவர் மற்றும் மகளிர் செய்ய உதவி குழுவினர் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்களை கல்லூரிச் சந்தையில் பார்வைக்கு வைத்தனர். இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர், இணை இயக்குநர் திரு பெரு. பெரியசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். இக்கல்லூரி சந்தையில் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் செல்வி .லோகரட்சகி பங்கேற்று பார்வையிட்டார். இக்கல்லூரி சந்தையில் கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுவினர், சிறு, குறு தொழில் முனைவோர் உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை பார்வைக்கு வைத்தனர்.
இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கண்டு களித்து வாங்கி மகிழ்ந்தனர் . விழாவில் இறுதியாக வணிக பயன்பாட்டியல் துறைத் தலைவர் முனைவர் மா. ஜெகன் அவர்கள் நன்றி கூறினார்.