தென்காசி புதிய பேருந்து நிலையத் திலிருந்து ராமேஸ்வரம் மற்றும் திருநெல்வேலிக்கு 2 வழிதடங்களில் புதிய பேருந்துகள் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.தென்காசி மாவட்டத்தில் நாள் தோறும் ஆயிரக் கணக்கானோர் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இங்கிருந்து சென்னை கேரளா பெங்களூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப் படுகின்றன புதிய பேருந்து இந் நிலையில் தென்காசியில் இருந்து ராமேஸ்வரம் மற்றும் திருநெல் வேலிக்கு 2 புதிய பேருந்துகள் சேவை தொடங்கி வைக்கப்பட்டது
இந் நிகழ்ச்சிக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மற்றும் தென்காசி திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் தலைமை வகித்து புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந் நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சாதிர், மாவட்ட பஞ்சாயத்து
துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி தெற்கு தென்காசி போக்குவரத்து கழக பணிமனை அலுவலர்கள், மற்றும் காங்கிரஸ், திமுக, கட்சி நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.