நடைபெற்று முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில், இந்திய கூட்டணியின் சார்பில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, புதுக்கோட்டை, வடக்கு சிலுக்கன்பட்டி, தெற்கு சிலுக்கன்பட்டி, கூட்டுடன்காடு, குமாரகிரி, தங்கம்மாள்புரம், சேர்வைக்காரன்மடம், கூட்டாம்புளி, முடிவைத்தானேந்தல், கட்டாலங்குளம், அணியாபரநல்லூர், ஸ்ரீமூலக்கரை, பேரூரணி, திம்மராஜபுரம், அல்லிக்குளம், தளவாய்புரம், வர்த்தகரெட்டிபட்டி, செக்காரக்குடி, தெய்வச்செயல்புரம், வடக்கு காரசேரி, சிங்கத்தாகுறிச்சி, எல்லைநாயக்கன்பட்டி, கீழ வல்லநாடு, வட வல்லநாடு, கலியாவூர், நாணல்காடு, வசவப்பபுரம், முறப்பநாடு, புதுக்கிராமம், கோவில்பத்து, கீழ புத்தனேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி உடன் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.