திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கற்க கசடற கல்வி சேவைகள் சமூக நல அமைப்பு மற்றும் புனித வளனார் முதியோர் இல்லம் இணைந்து முப்பெரும் விழாவை பிருதூர் கிராமத்தில் நடத்தியது.
இந்நிகழ்ச்சிக்கு அருள் சகோதரி ஸ்டெல்லா மேரி தலைமை தாங்கினார். வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க தலைவர்
பீ ரகமத்துல்லா, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், கற்க கசடற அமைப்பு நிர்வாகி டாக்டர் இரா.பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அருட்சகோதரி ரெக்சலின் மைக்கேல் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். மேலும் நகர மன்ற தலைவர் ஜலால், நகர மன்ற துணைத் தலைவர் க.சீனிவாசன், ஓய்வு பெற்ற மருத்துவர் டாக்டர் எஸ்.குமார், நகரச் செயலாளர் தயாளன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அருட்பணி பன்னீர்செல்வம், அருட்பணி ஆரோக்கியராஜ் ஆகியோர் ஆசியுரை வழங்கினர். விதவைப் பெண்களுக்கான சுயதொழில் பயிற்சியினை டாக்டர் ம. சுரேஷ்பாபு வழங்கினார். நிகழ்வில் முதியோர்களுக்கும், விதைவை பெண்களுக்கும் புடவைகள் வழங்கப்பட்டது. அபாகஸ் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதியில் ஜெயித்தூன் நிஷா நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.