எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே விழக்காடு கிராம சாலை 12 ஆண்டுகளாக பழுதடைந்த சாலை.போராடி பெற்ற சாலை பணியும் 6 மாதங்களாக பாதியில் நிற்பதால் தவிக்கும் கிராமமக்கள்.மழைக்காலம் தொடங்கும் முன்பாக சாலைப் பணியை விரைந்து முடிக்க அரசுக்கு கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சட்நாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட விழக்காடு கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் நிறைந்த கிராமத்திலிருந்து கல்வி,வேலை வாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் சீர்காழி நகர் பகுதியயையே கிராம மக்கள் சார்ந்துள்ளனர்.
இந்நிலையில் கிராமத்திலிருந்து சீர்காழி நகர் பகுதிக்கு செல்லும் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்க்கான பிரதான இணைப்புச் சாலை கடந்த 12 ஆண்டுகளாக பழுதடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக இருந்தது.இதனால்நடந்து கூட செல்ல முடியாத நிலையில் பள்ளி மாணவர்கள் கிராமமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இருசக்கர வாகனத்தில் செல்லுபவர்கள் அவ்வப்போது தடுமாறி விழுந்தும் பாதிக்கப்பட்டனர்.இதனை தொடர்ந்து விழக்காடு கிராம சாலையை சீரமைக்க கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்து போராடியதன் விளைவாக கடந்த 6 மாதங்களுக்கு முன் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
பழைய சாலையை சமன்படுத்தி ஜல்லிகற்கள் கொட்டி புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கியதால் விழக்காடு கிராமமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி வெகுநாள் நீடிக்கவில்லை.காரணம் கருங்கல் மற்றும் செம்மண் கொட்டியதோடு சாலைப்பணி கடந்த ஆறு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் புதிய சாலையிலும் ஜல்லிகற்கள் பெயர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.சாலையின் நடுவே புதிய பாலம் கட்டப்பட்ட நிலையில் இருபுறமும் கருங்கல் ஐல்லியை கொட்டி சென்றதால் மிகுந்த சிரமத்துடன் அப்பகுதியை கடந்து செல்லும் நிலைக்கு கிராமமக்கள் ஆளாகியுள்ளனர்.சாதாரண மழை பெய்தால் கூட நடத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கும் கிராம மக்கள் மழைக்காலம் தொடங்கும் முன்பாக விழக்காடு சாலைப்பணியை விரைந்து முடிக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.