கோவை மாவட்ட தெற்கு குறுமைய தடகள விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று அசத்தல்..
கோவை மாவட்ட பள்ளி கல்வி துறை சார்பாக தெற்கு குறுமைய தடகள விளையாட்டுப் போட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றன.
கோவை நேருவிளையாட்டு அரங்கில் நடைபெற்ற இதில்,தெற்கு குறுமையத்திற்கு உட்பட்ட சுமார் 35 பள்ளிகளை சேர்ந்து 1500-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மாணவ- மாணவியருக்கு, 14,17,19 ஆகிய மூன்று வயது பிரிவுகளின் அடிப்படையில், 100 மீட்டர் முதல் 1500மீட்டர் வரையிலான ஓட்டம், தொடர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல் உட்பட,பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன..
போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்..
இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நேரு ஸ்டேடிய வளாகத்தில் நடைபெற்றது..
பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் துணை செயலாளர் கெம்புராஜ் ஒருங்கணைப்பில் நடைபெற்ற விழாவில்,சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி,மாவட்ட கல்வி அலுவலர் ஜெய்சங்கர்,உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன், குணியமுத்தூர் அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுரேஷ்,மற்றும் கார்த்திக் குமார் சின்ராஜ்,கோகுல் நாத்,கீர்த்தன்யா,ஆகியோர் கலந்து கொண்டனர்..
இதில் மாணவர்களுக்கான ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பில் முதல் இடத்தை இஸ்லாமிய மெட்ரிக் பள்ளியும், குணியமுத்தூர் அரசு உயர் நிலை பள்ளி இரண்டாம் இடத்தையும்,நிர்மலா மாதா பள்ளி மூன்றாவது இடத்தை பிடித்தனர்.
மாணவிகளுக்கான ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியும் கைப்பற்றியது.இரண்டாவது இடத்தை ஈக்விடாஸ் பள்ளியும், மூன்றாவது இடத்தை வி.எல்.பி.பள்ளியும் பிடித்தன..
இரு பிரிவுகளிலும் சேர்த்து ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி வென்று அசத்தியது..
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஆஷ்ரம் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடதக்கது.
போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவ,மாணவிகள் ஒருவருக்கொருவர் உற்சாகமாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்..