தமிழக வெற்றி கழக கொடி அறிமுகம்-தாராபுரத்தில் கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டம்
தாராபுரம் சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நேற்று தனது கட்சி கொடி அறிமுகம் செய்து கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
இதனை ஒட்டி தாராபுரம் அண்ணா சிலை அருகே தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கட்சியினர் மகிழ்ச்சி கொண்டாடினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சொர்க்கம் ரமேஷ் செய்திருந்தார் நகரத் தலைவர் சார்லி விக்டர் செயலாளர் ரமேஷ் இளைஞர் அணி தலைவர் கதிர் செயலாளர் அபுதாஹிர் தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் ஹரிஹரசுதன் செயலாளர் பாரத் பாலாஜி தொண்டர் அணி தலைவர் பிரபு ஒன்றிய இளைஞர் அணி ராம்குமார் மேற்கு ஒன்றிய தலைவர் கௌதம் செயலாளர் ரமேஷ் கிழக்கு ஒன்றிய தலைவர் ஸ்ரீகாந்த் செயலாளர் பன்னீர்செல்வம் நகர மகளிர் அணி தலைவர் சந்தனம்மாள் தாராபுரம் மேற்கு ஒன்றிய மகளிர் அணி தலைவர் சுமதி மூலனூர் ஒன்றிய மகளிர் அணி தலைவர் சந்திரமதி மற்றும் சங்கீதா பொறியாளர் அணி ஜபர்கஷதீக் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்.
தாராபுரம் செய்தியாளர் பிரபு