தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த குடற்புழு நீக்க மாணவ மாணவிகளுக்கு
அல்பெண்டசோல் எல்பி 400 மி.கி மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
ஆலங்குளம் வட்டார சுகாதார மருத்துவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் சிவகுமார்,அரசுமேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நாகம்மாள், உதவி தலைமை ஆசிரியர் செந்தாமரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுகாதார மேற்பார்வையாளர் கங்காதரன், சுகாதார ஆய்வாளர் வரவேற்புரை வழங்கினார்.
ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு
குடற்புழு நீக்க அல்பெண்டசோல் எல்பி 400 மி.கி.மாத்திரைகள் வழங்கி நிகழ்ச்சியினை துவக்கி வைத்து பேசினார்
அப்போது ;-
தமிழக அரசால் குடற்புழு நீக்குதல் வருடத்திற்கு
இரண்டு முறை பள்ளி ,கல்லூரிகளில் நடைபெற்று வருகிறது.
குடற்புழுவினால் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதை நீக்கும் விதமாக தமிழக அரசு ஆண்டுதோறும்
இரு முறை நடத்தி வருகிறது. குடற்புழுவினால் உடலில் ரத்த சோகை நோய் ஏற்படுகிறது. இதனை கட்டுபட்டுத்த
அல்பெண்டசோல் மாத்திரைகள் எல்பி 400 மி.கி மத்திரை வழங்கப்படுகிறது என பேசினார்.
அதனை அடுத்து வட்டார மருத்துவர் ஆறுமுகம் பேசும்போது;-
ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள் பள்ளிகள் கல்லூரிகள்
அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட்ட வருகிறது எனவும் பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் மோகன்லால், விக்னேஷ். பகுதி நேர செவிலியர்கள் சொர்ணலதா, நல்லம்மாள் ,கிராம சுகாதார செவிலியர் மணிமேகலை, வசந்தி , ஆலங்குளம் பேரூராட்சி பணியாளர் ராஜன் உள்பட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.