தஞ்சாவூர் கணபதி நகரில் உள்ள குரு தேவி ஸ்ரீ ஜானகி மாதா ஆசிரமத்தில் மகா கும்பாபிஷேக வைபவம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் குரு தேவி ஸ்ரீ ஜானகி மாதா ஸ்ரீ மாத்ருபூதேஸ்வரர் ஆசிரமம் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். இந்த ஆசிரமத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 20-ம் தேதி முதல் பல்வேறு விதமான ஹோமம் பூஜைகள் நடைபெற்றன.”
“தொடர்ந்து யாகசாலை பூஜையில் 200 வேத விற்பனர்களால் ஹோமம் நடத்தப்பட்டு வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை 7.30 மணி முதல் 4 கால யாக பூஜை மற்றும் கோ பூஜை திருமுறை பாராயணம் நடைபெற்று யாக சாலையில் விசேஷ ஹோமங்கள் செய்யப்பட்டு மகா பூர்ணாஹூதி நடைபெற்றது”
” பின்னர் ஆசிரமத் தலைவர் டாக்டர் கணபதிரமணன் முதல் மரியாதை செலுத்தப்பட்டு ,பூஜையில் வைக்கப்பட்டிருந்த தீர்த்த குடத்தை சுமந்து வாத்தியங்கள் முழங்க இசை மேளத்துடன் வந்து சிவாச்சாரியார்கள் கோயிலைச் சுற்றி எடுத்து வந்து கோயில் கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனா். அங்கிருந்த பக்தா்கள் மீதும் புனித நீா் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக வைபவத்தைக் காண தஞ்சை மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். .
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை குரு தேவி ஸ்ரீ ஜானகி மாதா ஆசிரமம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.