திண்டுக்கலில் தமிழ் நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில், 57 புதிய பேருந்துகள் அறிமுகம் விழா நடைபெற்றது.
இவ்விழாவில்
ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி,மாவட்ட ஆட்சித் தலைவர்.பூங்கொடி இ.ஆ.ப தலைமையில் திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் 5 நகர்ப்புற பேருந்துகளையும், 53 புதிய புறநகர் பேருந்துகளையும், திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதிய வழித்தடத்தில் ஒரு பேருந்து என 59 புதிய பேருந்து சேவையினை துவக்கி வைத்தனர்.
பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இவ்விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை உரையாற்றினார்.