திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், சென்னையில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் தமிழக வெற்றி கழகம் கொடியைஅறிமுகம் செய்து வைத்தார்.

அதனை ஒட்டி தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் வலங்கைமான் மேற்கு ஒன்றிய தலைவர் எஸ். நெப்போலியன் மற்றும் கிழக்கு ஒன்றிய தலைவர் ஆர். எஸ். விஜய் தலைமையில் ;வலங்கைமான் ராமர் கோயில் பேருந்து நிறுத்தம் பகுதி, கடைத்தெரு காளியம்மன் கோவில், வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயம், செட்டி தெரு வேம்படி மகா மாரியம்மன் ஆலயம் ஆகிய இடங்களில் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அடுத்த முதல்வர் விஜய் என கோஷங்கள் இட்டவாறு தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் வலங்கைமான் கிழக்கு ஒன்றிய துணைத் தலைவர் எஸ். வரதராஜன்,கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் எஸ். ராஜேஷ்,மேற்கு ஒன்றிய பொருளாளர் ஒய். சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.