செங்குன்றம் செய்தியாளர்
மாணவ மாணவிகள் சுவிட்ச் ஆப் மொபைல் போன் சுவிட்ச் ஆன் லைஃப் என்ற தலைப்பில் செல்போன் உபயோகத்தை குறைக்கவும் அதனால் ஏற்படும் தீமைகள் பற்றி எடுத்துரைக்கும் பேரணியை தனியார் பள்ளி மாணவ மாணவிகள் நடத்தினர்.
செங்குன்றம் அடுத்த கோணிமேடு குட்வேர்ல்ட் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் செல்போன் பயன்பாட்டை குறைக்கவும் அதனால் ஏற்படும் தீங்குகள் குறித்தும் பள்ளி மாணவ மாணவிகள் செங்குன்றம் பஸ் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் கூட்டு சாலை வழியாக காந்திநகர் வரை பேரணியாக சென்றனர்.
இந்தப் பேரணியியை செங்குன்றம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் பள்ளியில் தாளாளர் ஜலாலுதீன் முதல்வர் ஜீனத்பர்வீன் கமர்நிஷா இதயத்துல்லா மற்றும் உதவி ஆய்வாளர்கள் கமலக்கண்ணன், ஆல்ட்ரின்மேஷ் மற்றும் போக்குவரத்து போலீசார் மற்றும் சுவாட் நிர்வாகி சமீர் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவியுடன் சுமார் 3 கிலோமீட்டர் வரை பேரணியில் நடந்து சென்றனர்.
இந்நிகழ்வில் மாணவ மாணவிகள் கைகளில் பதாகைகள் ஏந்தி செல்போன் அதிகமாக பயன்படுத்துவது தவிர்க்கவும் வாகனங்களில் செல்லும்போது பேசுவதை தவிர்க்கவும் இதனால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கவும் செல்போனில் ஏற்படும் கதிர்வீச்சுகளின் ஆபத்துக்களை தடுக்க கோஷமிட்டனர்.