கம்பம் – புதுப்பட்டி ஜெய் டெக் இன்டர்நேஷனல் பள்ளியில் கபாடி போட்டி பள்ளி சேர்மன் ஜெகதீஸ் பரிசு வழங்கினார்.
தேனி மாவட்டம் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கபாடி போட்டி கம்பம் புதுப்பட்டி ஜெய்டெக் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது.
இந்த பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 22 பள்ளிகள் கலந்து கொண்டனர் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் ஜெய்டெக் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி வெற்றி பரிசையும், 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் வேலம்மாள் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி வெற்றி பரிசையும் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் ஜெய்டெக் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி வெற்றி பரிசையும் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஜெய் டெக் பள்ளி சேர்மன் ஏ.ஜெகதீஷ், பள்ளி தாளாளர் ஜெ
கீதா, மற்றும் சக்தி விநாயகர் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் கருப்புசாமி பரிசுகளை வழங்கி பாராட்டினார். போட்டி நடுவராக ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அர்ஜுனன், சிபியூ மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராதாகிருஷ்ணன், காமாட்சிபுரம் நாடார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பாப் ஆனந்தராஜ், ராஜதானி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சிவகுமார் நடுவராக இருந்து வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுத்தனர்
இதில் கலந்துகொண்ட அனைத்து பள்ளி மாணவ மாணவிகளை ஜெய்டெக் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் சாந்தி ரோஜா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தீபா, அபராஜிதன், மது, கௌதம், பூபேஷ்குப்தா மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டி ஊக்குவித்தனர்.