பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பரவாய் கிராமத்தில் நீர்வளம் நிலவளம் பொருந்திய சோழவள நாட்டில் காவிரிக்கு வடபால் பகுதியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீஅய்யனார்,ஸ்ரீகருப்பு, ஸ்ரீ மாணிக்காயி, ஸ்ரீ முதலியாண்டவர், ஸ்ரீ நல்லப்புரவி, ஸ்ரீ காதால கருவமணி, ஸ்ரீ வெள்ளையம்மாள், ஸ்ரீ வெள்ளச்சி, ஸ்ரீ குருசாமி, சப்த கன்னிமார்கள் முன்னோடியான தெய்வங்களுக்கு ஆவணி மாதம் 7 ஆம் தேதி கோவில் முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் பரவாய் கிராமத்தைச் சுற்றியுள்ள நன்னை,பெருமத்தூர், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.