விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு பகுதியில் கடந்த 1888 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்திலேயே துவக்கப்பட்ட ஆங்கிலோ வெர்னாகுலர் எனும் பள்ளி ஏ கே டி தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக நூற்றாண்டு காலத்தை கடந்து சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இப்பள்ளியில் 1924 முதல் பயின்ற மாணவர்கள் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பும் சிறப்பாக நடத்தப்பட்டது.
பள்ளித்தாளாளர் ஏ கே டி கிருஷ்ணமராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாணவர் ராகேஷ் குமார் வரவேற்று பேசினார் விழாவில் பேசிய பள்ளி தாளாளர் ஒவ்வொரு ஆண்டும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெறும் ஜூன் 2-வது ஞாயிற்றுக்கிழமை ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் ஜூலை இரண்டாவது வாரத்தில் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் ஆகஸ்ட் இரண்டாவது வாரம் பெண்கள் கல்லூரிக்கும் முன்னாள் மாணவ மாணவிகள் மாணவிகள் சந்திப்பு நடைபெறும் இதற்காக முன்னாள் மாணவ மாணவிகள் சங்கம் என பதிவு செய்து வைத்து அடுத்த ஆண்டு முதல் சிறப்பாக நடைபெற உள்ளது இதற்காக தலைவராக பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர் இருப்பார் செயலாளராக முன்னாள் மாணவர்கள் சார்பில் ஒருவர் நியமிக்கப்படுவார் பொருளாளராக அந்த பள்ளியில் பணி புரியும் முன்னாள் மாணவர்கள் இருப்பார்களேயானால் அவர்களை வைத்து இந்த குழு ஏற்படுத்தப்படும் கடந்த ஆறு மாதங்களில் பள்ளிகளில் கடுமையான மாற்றம் ஏற்பட்டுள்ளது மாணவ மாணவிகள் விளையாட்டு மற்றும் ஆங்கில உச்சரிப்பு மற்றும் எழுத்து முறைகள் போன்றவைகளை சிறப்பாக நடத்தப்படுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது இது தவிர யோகா விளையாட்டு ஆங்கில பேச்சு தனிமனித ஆளுமை போன்ற வேலையும் படிப்பு மட்டுமல்லாது இவர தனிப்பட்ட திறமைகளையும் கண்டறிந்து அவர்களை அதில் ஊக்குவிக்கும் அளவிற்கு பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது இதில் பங்கேற்கும் மாணவ மாணவிகள் அனைவருமே புதுமையான நிகழ்ச்சி என்பதால் தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டிய அளவிற்கு நாங்கள் ஏற்பாடு செய்து கொண்டிருப்பது தனிச்சிறப்பாகும்”- இவ்வாறு பள்ளியின் செயலர் ஏகேடி கிருஷ்ணமராஜூ பேசினார்.
விழாவில் முன்னாள் ஆசிரியைகள் மாணவர்களால் பாராட்டப்பட்டு நினைவு பரிசு வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.