திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணைப்படி பள்ளி மேலாண்மை குழு மறு சீரமைப்பு தேர்தல் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்சோம. மாணிக்கவாசகம்,ஆசிரியர் பிரதிநிதி ஜே. சார்லட் மணி, பார்வையாளர் ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திமுக நகர செயலாளர் பா. சிவனேசன் மற்றும் பள்ளிமாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை பிரேமாவதி அனைவரையும் வரவேற்று, உறுப்பினர்களை தேர்வு செய்யும் முறையைப் பற்றி விளக்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவராக கே. அமுதா, துணைத் தலைவராக கே. நித்தியா மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் ஆசிரியர், ஆசிரியைகள்,மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள்,கல்வி ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், சுய உதவி குழுக்கள், இல்லம் தேடி கல்வி போன்ற அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் இறுதியில் சான்றிதழ் வழங்கப்பட்டு, உறுதிமொழி ஏற்று கொண்டனர்.