செங்கல்பட்டு மாவட்டம்
செய்யூர் அருகே உள்ள புத்தூர் கிளையில்
தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் 72 வது பிறந்த நாள்
விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஒன்றியசெயலாளர் செய்யூர் மா.மூர்த்தி
தலைமையில் கேப்டன்விஜயகாந்த் அவர்களின்
திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திஅதன் பின்னர் கழக கொடிஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான அனகை முருகேசன் கலந்து கொண்டு
ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை
ஒன்றிய பொருளாளர் வி.செல்லப்பன் செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு
மாவட்ட துணைச் செயலாளர்
ரமேஷ்பிரபாகரன்,கிளை கழக நிர்வாகிகள்
வி.மன்னன், ரவி, மணி, செந்தில்,மகேந்திரன், எட்டியப்பன், தாமரைக்கண்ணன், சிலம்பரசன், செய்யூர் ஊராட்சி செயலர் செந்தில்,குருசேவ், பரந்தாமன், உலகநாதன்,உட்பட தேமுதிக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.