தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்க முடிவு!
31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் அமைப்பின் சார்பில் செப்டம்பர் 10ம் தேதி நடைபெறும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திலும், செப்டம்பர் 29, 30 அக்டோபர் 1 ஆகிய 3 நாட்கள் நடைபெறும் கோட்டை முற்றுகைப் போராட்டத்திலும் முழுமையாகப் பங்கேற்பதென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் மணிமேகலை தலைமையில் மதுரை மாவட்ட
சங்க அலுவலகத் தில் நடைபெற்றது.
துணைப் பொதுச்செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். மதுரை மாவட்டச்செயலாளர் சீனிவாசகன் வரவேற்று பேசினார்.