திருவாரூர் அருகே உள்ள நீலக்குடி கேந்திரி யா வித்யாலயா பள்ளியில்கிருஷ்ண ஜெயந்தி விழா.
திருவாரூர் அருகே நீலக்குடி
கேந்திரியா வித்யாலயா பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கிருஷ்ணர் ராதை வேடமடைந்து வந்த பாரம்பரிய உடையில் மாணவ மாணவிகள்
வந்திருந்தனர்
விஷ்ணுவின் 8-வது அவதாரமான பகவான் கிருஷ்ணரின் பிறப்பை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி என்கிற இந்து பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் கோகுலாஷ்டமி மற்றும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி என்றும் அழைக்கப்படும் இந்த மகிழ்ச்சியான நிகழ்வு இந்தியா முழுவதும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது
இந்த நாளில் விரதம் இருப்பது பக்திப் பாடல்களைப் பாடுவது மற்றும் கிருஷ்ணரின் வாழ்க்கை நிகழ்வுகளை கலை நிகழ்ச்சிகள் மூலம் மீண்டும் நடத்துவது உரியடி போன்ற பல்வேறு பாரம்பரிய நிகழ்வுகள் நடத்தப்படுகிறது
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகள் கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்து கலந்து கொண்டனர்
மேலும் கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது