சாயர்புரத்தில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்
தூத்துக்கும்
சாயர்புரம் அருகே நடுவக்குறிச்சி செல்வசுமங்கலி மஹாலில் நாம் இந்தியர்கட்சி மற்றும் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது
முகாமிற்கு நாம் இந்தியர்கட்சி நகர செயலாளர் எம்.பரத் தலைமை வகித்தார்
நகர தலைவர் அ, ஜெயபாலன், நகர பொருளாளர் வே.பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
நாம் இந்தியர்கட்சி மாநில பொருளாளர் டி.ஜெயகணேஷ் கண் சிகிச்சை முகாமை துவக்கிவைத்தார்
தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் பிரித்தி கலந்து கொண்டு கண் சிகிச்சைக்கு வந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தார்
இந்நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கே.கருப்பசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.சங்கரன், கட்டாலங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆ. ஏசுவடியான் புதுக்கோட்டை கூட்டுறவு வங்கி தலைவர் எம்.மாரிமுத்து பட்டன், தொழிலதிபர் முத்துராமன், ப.ராஜ்
மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு கண் சிகிச்சை பெற்றனர்