சி கே ராஜன் 9488471235
கடலூர் மாவட்ட செய்தியாளர்
கடலூர் மாநகராட்சியில் குப்பைகள் சேகரிக்க ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட 130 வாகனங்களில் 60 வாகனங்கள் மாயமானது கண்டுபிடிப்பு.
24 மணி நேரத்தில் மாயமான வாகனங்களை ஒப்படைக்க ஒப்பந்ததாருக்கு கெடு விதிப்பு
45 வார்டுகள் கொண்ட மாநகராட்சியில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என்ற புகார்களை தொடர்ந்து ஆய்வு செய்ததில் 60 வாகனங்கள் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது
மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் பயன்படுத்தும் வாகனங்களை ஆணையாளர் மருத்துவர் அனு, மாநகர மேயர் சுந்தரி ராஜா திடீர் ஆய்வு செய்த போது
பழுதடைந்த நிலையிலும் வயதானவர்களை துப்புரவு பணிகளுக்கு பயன்படுத்துவது பற்றியும் புகார் வந்ததை அடுத்து
சரிவர வேலை செய்யாத துப்புரவு பணி செயலற்ற நிலையில் செயல்படுகின்ற துப்புரவு பணியாளர்களையும் துப்புரவு பணியாளர் ஒப்பந்ததாரர்களையும் மாநகர மேயர் சுந்தரி ராஜா
உங்க வேலைய கூட ஒழுங்கா பண்ண மாட்டீங்களா?..
டீ கடைல நின்னு வடை சாப்பிட்டுட்டு கதை பேசவா வரீங்க?…
சரியாக சேகரிக்கப்படாத குப்பைகள்,
பழைய இரும்பு கடைக்கு செல்லும் நிலையில் குப்பை வண்டிகள் – ஒப்பந்ததாரர்களை
கண்டித்த மேயர்..!*சரியான ஒப்பந்த தொழிலாளர்களை துப்புரவு பணியாற்ற வகை செய்யுங்கள். குப்பைகளை சேகரிக்கின்ற வண்டிகளை முறையாக செயலாற்றும் நிலையில் செயல்படுத்துங்கள் என ஆணையாளர் முன்னிலையில் அறிவுறுத்தினார்.