மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூல திருவிழா, வரும் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூல திருவிழா வரும் 30ம் தேதி துவங்கி செப்.16ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத் திருவிழா கொடியேற்றம் 30ம் தேதி காலை 9.55 மணிக்கு மேல் 10.19க்குள் நடக்கிறது. இத்திருவிழாவின் முக் கிய நிகழ்வுகளில் ஒன்றான கருங் குருவிக்கு உபதேசம் செய்த விளையாடல் செப்.5ம் தேதி நடக்கிறது. செப்.6ம் தேதி நாரைக்கு முக்தி கொடுத்தல், அடுத்தடுத்த நாட்களில் மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்கு பொற்கிழி அளித்தல், உலவவாக்கோட்டை அருளியது, பாணனுக்கு அங்கம் வெட்டுதல் போன்றவை நடைபெற இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக செப்.11ம் தேதி காலை சுவாமி வளையல் விற்ற லீலையும், இரவு 6.30 மணிக்கு மேல் சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சியும்நடக்கிறது. செப்.12ம் தேதி நரியை பரியாக்கிய லீலையும், அடுத்தடுத்த நாட்களில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை, விறகு விற்ற லீலை ஆகியவை நடைபெறும். செப். 15ம் தேதி சட்டத்தேர் வீதி உலா மற்றும் இரவு சப்தாவரணத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளுதல் நடைபெறும்.
இதையடுத்து செப்.16ம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதில் செப்.13ம் தேதி புட்டு திருவிழா நடைபெறும் நாளில், கோயிலுக்கு வரும் பக்தர்கள் வடக்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டு, ஆயிரங் கால் மண்டபத்தை காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை யும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரையும் பார்வை யிட அனுமதிக்கப்படுவர்.
இதன் தொடர்ச்சியாக இரவு 9.30 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.