“தி டைம்லெஸ் எடிட்” (காலத்தை கடந்து நிற்கும் வைரங்களின் கலெக்ஷன்) மற்றும் புத்தாக்க தொழில்நுட்ப ஆபரண கலெக்ஷன்
மிக நேர்த்தியான ஆபரணங்களை உருவாக்குவதில் முன்னோடி என புகழ்பெற்றிருக்கும் கீர்த்திலால்ஸ், கோயம்புத்தூரின் கிராஸ்கட் ரோடு ஷோரூம்-ல் அதன் சமீபத்திய வைர ஆபரண கலெக்ஷனான ‘தி டைம்லெஸ் எடிட் மற்றும் மிக நவீன புத்தாக்க தொழில்நுட்ப ஆபரண தொகுப்பையும் பெருமையுடன் வழங்குகிறது.
நவீன போக்குகளுடன் பாரம்பரிய அழகினை மேம்பட்ட திறனுடன் ஒருங்கிணைத்திருக்கிற தி டைம்லெஸ் எடிட் வைர ஆபரண தொகுப்பானது, மிக நுட்பமான கைவினைத்திறனையும், தனிச்சிறப்பான வடிவமைப்பையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்துகிறது. இந்த பிரத்யேக கலெக்ஷன், பாரம்பரிய அழகை தற்காலத்திய, நவீன போக்குகளோடு கலந்து மேம்பட்ட அழகை நேர்த்தியாக பிரதிபலிக்கிறது.
கீர்த்திலால்ஸ்-ன் இன்னோவேட்டிவ் டெக்னாலஜி ஜூவல்லரி லைன் (புத்தாக்க தொழில்நுட்ப ஆபரண தொகுப்பு). நவீன தொழில்நுட்பங்கள், இன்டெராக்டிவ் அம்சங்கள், பிரத்யேகமாக வடிவமைத்துக் கொள்ளக்கூடிய வசதிகளுடன் லக்ஸரி ஆபரணங்களை புரட்சிகரமானதாக மாற்றுகிறது.
முற்போக்கு சிந்தனை அடிப்படையிலான இந்த கலெக்ஷன், பாரம்பரியமாக ஆபரணம் தயாரிக்கும் செயல்முறையை மேம்படுத்தி மறுவரையறை செய்கிறது. 2024 செப்டம்பர் 5-ம் தேதி வரை கீர்த்திலால்ஸ்-ன் கிராஸ்கட் ரோடு ஷோரூம் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த அற்புதமான கலெக்ஷன்களை காண நேரில் வருகை தாருங்கள். காலத்தைக் கடந்து நிற்கும் அழகு மற்றும் தற்காலத்திய நவீனத்துவம் ஆகியவற்றின் மிக நேர்த்தியான கலவையை கண்டறியுங்கள். அழகு மிளிரும் இந்த ஆபரணங்களை வாங்கி ஆனந்தமான அனுபவத்தைப் பெற்றிடுங்கள்.
“இந்த சிறப்பான ஆபரணத்தை வழங்குவதில் நாங்கள் அளவில்லா உற்சாகம் கொள்கிறோம். பாரம்பரிய நேர்த்தியை வடிவமைப்போடும், தொழில்நுட்ப
புத்தாக்கத்தோடும் ஒருங்கிணைத்து வழங்குவதில் எமது அர்ப்பணிப்பை இந்த கலெக்ஷன் வெளிப்படுத்துகிறது.
அற்புதமான கைவினைத்திறனையும் மற்றும்
புத்தாக்க தொழில்நுட்பத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தும் எமது ஆபரண கலெக்ஷனை நேரில் பார்வையிட்டு அற்புதமான அனுபவத்தைப் பெற உங்கள் ஒவ்வொருவரையும் நாங்கள் அன்புடன் அழைக்கிறோம்” என்று கீர்த்திலால்ஸ்-ன்
இயக்குநர்-பிசினஸ் செயல் உத்தி திரு. சூரஜ் சாந்தகுமார் கூறினார்.