செங்குன்றம் செய்தியாளர்
புழல் சூரப்பேடு பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 32 ) இவர் கான்ட்ராக்டராக உள்ளார் .
தனது வேலைகளுக்கு வெளியே செல்வதற்காக புதிதாக டாட்டா சொகுசு காரை கடந்த முதல் மாதம் வாங்கி உள்ளார். காரை வாங்கி திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலுக்கு காரை ஓட்டிச் செல்லும்போது கார் இஞ்சின் பழுதடைந்த நிலையில் டாடா கார் நிறுவனத்திடம் முறையிட்டுள்ளார் இதனைத் தொடர்ந்து கார் பழுதுபார்க்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து மீண்டும் சிறுவாபுரி கோயிலுக்கு சென்றபோது கார் நடு வீதியில் நின்றதாகவும் கியர் பாக்ஸ் உடைந்து விட்டதாகவும் கம்பெனியில் கூறியதில் மீண்டும் சர்வீஸ் சென்டரில் காரை சரி செய்து கொடுத்துள்ளனர் .
இதேபோல் காரை ஓட்டிச் சென்றபோதொல்லாம் அடிக்கடி காரின் பாகங்கள் பழுதடைந்து தொந்தரவு கொடுத்தபடியால் மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள எஃப் .பி .எல். டாடா கார் சர்வீஸ் சென்டரில் காரை சர்வீஸ்காக விட்டுள்ளார் .
பின்னர் மூன்று நாட்கள் கழித்து போன் மூலம் தொடர்பு கொண்டு கார் சரியாகி விட்டதா என கேள்வி எழுப்பிய பொழுது அதற்கு தகுந்த பதிலளிக்காமல் சமாளித்ததால் சந்தேகம் அடைந்த அவர் தனது மனைவியுடன் நேரில் சென்று காரை கேட்டுள்ளார் .அதற்கு அங்கு உள்ள மேலாளர் உங்களது காரை காணவில்லை என அலட்சியமாக பதில் கூறியுள்ளார் அதிர்ச்சியடைந்த கணேஷ் இது குறித்து மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் சம்பவ இடத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
13 லட்ச ரூபாய் பணம் கொடுத்து புதியதாக வாங்கிய கார் பழுதடைந்த நிலையில் சர்வீஸ் நிலையத்திலேயே திருடு போன சம்பவத்தால் செய்வதறியாது திகைத்து வருகிறார் காரின் உரிமையாளர் கணேஷ்.