கூடலூர் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தேனி மாவட்டம் கூடலூர் அமைந்துள்ள காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது கூடலூர் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் நூதன ஆலய பிரதிஷ்ட மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது
பல வருடங்களாக பாழ அடைந்த நிலையில் கிடந்த காளியம்மன் திருக்கோவில் பூரண அமைப்பு மற்றும் திருக்கோவில் திருப்பணி நிறைவடைந்தது விமானம் மற்றும் மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது
விக்னேஸ்வர பூஜை தேவதா அனுக்ஞையாந்திரம் மற்றும் சூலாயுத பிரதிஷ்டை யாகங்கள் நடைபெற்றது யாஜமான சங்கல்பம் விக்னேஸ்வர பூஜை புண்ணிய யாகவாசனம் பஞ்சகாவிய பூஜை கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் மகாலட்சுமி ஹோமம் வாஸ்து சாந்தி ம்ருத சங் கிரஹணம் கோ பூஜை நடைபெற்றது
இதனைத் தொடர்ந்து தர்வயாஹூதி கடம் புறப்பாடு பல்வேறு பூஜைகளுக்கு பின்பு பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கும்ப கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது இதன் பின்பு புனித கலசநீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது