அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மாணிக்கம்பட்டி ஊராட்சியில் தமிழக அரசின் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது
சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கலந்து கொண்டு முகாமை குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.
இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மாற்றுத்திறனாளிகள் துறை வட்டார வளர்ச்சித்துறை வாழ்வாதார கடன் உதவித்துறை சுகாதாரத்துறை வருவாய்த்துறை கூட்டுறவு துறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை தமிழ்நாடு மின்சார துறை காவல்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பல்வேறு சேவைகள் குறித்து தனித்தனி அரங்கு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டது..
இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர்கள் ராமச்சந்திரன், பார்த்திபன், யூனியன் ஆணையாளர்கள் கலைச்செல்வி, வள்ளி, திமுக ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், மாவட்ட அவை தலைவர் பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், நகரச் செயலாளர் மனோகரவேல் பாண்டியன், மாணிக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலா பாலமுருகன், துணைத் தலைவர் ராஜேஷ், ஒன்றிய கவுன்சிலர் வசந்திகலைமாறன், தெத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி சீனிவாசன், விவசாய சங்க நிர்வாகி தனிராஜன், செந்தில், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் பெரிச்சி, நன்றி தெரிவித்தார்..