ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பெண் குழந்தை பாதுகாப்பு பெண்களுக்கான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பெண்களுக்கான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி நிறுவனச் செயலர் என் ராமகிருஷ்ணன் எம் எல் ஏ வழிகாட்டுதலின் பேரில் கல்லூரி இணைச் செயலாளர் என் எம் ஆர் வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் ஆகியோரின் வழிகாட்டுதலின் படியும் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா முன்னிலையில் நடைபெற்றது கல்லூரி தமிழ் துறை தலைவர் ஆர். ஷர்மிளா வரவேற்புரை யாற்றினார்
கம்பம் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் லதா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பெண் குழந்தை பாதுகாப்பு பெண்களுக்கான சட்டங்கள் குறித்து உரையாற்றினார். சகி ஒருங்கிணைந்த சேவை மையம் வழக்குப் பணியாளர் பெளசியா பேகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 18 வயதில் இருக்கும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அவற்றை சேவை மையம் மூலம் எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி விரிவாக விளக்கி பேசினார்
தேனி மாவட்ட வழக்கறிஞர் பொன் ராதிகா போக்சோ சட்டம் மற்றும் 19 வயதுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான மன ரீதியான துன்பங்கள் ஆர்டிகிள் 14 கட்டாய கல்வி மற்றும் செல்போன் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பற்றியும் வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டம் பெண்கள் பாலியல் வன்கொடுமை போன்ற பல சட்டங்களை மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார்
இந்த நிகழ்ச்சிகள் அனைத்து துறை சார்ந்த மாணவிகளும் பேராசிரியைகளும் பங்கேற்று விழிப்புணர்வு பயனடைந்தனர்
கல்லூரி பேரவை செயலாளர் மூன்றாம் ஆண்டு தமிழ் துறையை ச்சேர்ந்த மாணவி எம் கமலி நன்றி கூறினார் கல்லூரி மகளிர் பிரிவு உயிர் தொழில்நுட்பவியல் துறை த்தலைவர் பி. பொற்கொடி மற்றும் மாணவிகளின் உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.