மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அனைத்து ஊராட்சிகளில் தொழில் வரி உயர்த்தி செலுத்துவதற்கான எவ்வித ஆணையும் எழுத்துப்பூர்வமாக பிறப்பிக்காமல் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 276க்கு புறம்பாக தொழில்வரி பிடித்தம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்…
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் தொழில் வரி உயர்த்தி செலுத்துவதற்கான எவ்வித ஆணையும் எழுத்துப்பூர்வமாக பிறப்பிக்காமல் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 276க்கு புறம்பாக தொழில்வரி பிடித்தம் செய்யப்படுகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 276 தொழில்வரி தொடர்பாக தொழில் வரியை மாற்ற இந்திய அரசியல் அமைப்புச் சட்ட பிரிவு 276க்கு புறம்பாக தொழில் வரியை மதுரை மாவட்டத்தில் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் நடப்பு அரையாண்டிற்கான தொழில் வரியை அதிகபட்ச தொழில் வரியாக ரூ1250ஐ பிடித்தம் செய்யாமல் விதிகளுக்கு புறம்பாக ரூ1565 ஆக கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி செயலர்கள் மூலமும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்
பட்ட சொக்கம்பட்டி ஊராட்சியில் தொழில் வரி செலுத்த சென்ற ஆசிரியர் பரணி பாபுவிடம் தொழில் வரியாக ரூ1565ஐ சொக்கம்பட்டி ஊராட்சியின் ஊராட்சி செயலர் கனகராஜ் கேட்டதற்கு, ஆசிரியர் பரணி பாபு, தொழில் வரி ரூ 1250-ல் இருந்து ரூ1565 ஆக உயர்த்தியதற்கான எழுத்துப்பூர்வமான தமிழக அரசின் ஆணையை சொக்கம்பட்டி ஊராட்சி செயலர் கனகராஜிடம் கேட்டமைக்கு, சொக்கம்பட்டி ஊராட்சியின் செயலர் கனகராஜ் எழுத்துப் பூர்வமான தமிழக அரசின் ஆணையை தராமல் ஆசிரியர் பரணி பாபுவை, நீங்கள் ஆணவத்துடன் இருக்கிறீர்கள் என்று கூறி ஒருமையில் தகாத வார்த்தைகளால் பேசி உள்ளார்.
மேற்கண்டவாறு அரசின் நன்னடத்தை விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட சொக்கம்பட்டி ஊராட்சி செயலர் கனகராஜை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளை சார்பில்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்ட செயலாளர் சீனிவாசன் கண்டன அறிக்கை விடுத்துள்ளார்.