கள்ளுக்கு உண்டான தடையை நீக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேலுசாமி அறிவிப்பு
விவசாயிகளின் நிலத்தில் உள்ள தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து இறக்கும் கள்ளுக்கு உண்டான தடையை தமிழக அரசு நீக்க கோரி 31.8.2024 நாளை சனிக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு நாமக்கல் பஸ்டாண்டு மினி பேருந்து நிற்கும் இடம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் எனது தலைமையில் நடைபெறவுள்ளது என்று அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
R . வேலுசாமி.
மாநிலத் தலைநகர்.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம்.