போடிநாயக்கனூரில் ஆரோக்கிய அன்னை தேவாலய திருவிழா துவக்கம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தேவாலய தெருவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் இருந்து ஆரோக்கிய அன்னையின் உருவம் குறித்த கொடியை திரளான கிறிஸ்தவர்கள் போடிநாயக்கனூரில் பிரதான வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர்
இதன் பிறகு புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் கொடி மரத்தின் முன் அந்த கொடி புனிதப்படுத்தப்பட்டது இதனை தொடர்ந்து வான வேடிக்கைகள் முழங்க கொடி ஏற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி தேர் பவனி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது