ராஜபாளையத்தில் நாற்று இலக்கிய அமைப்பு சார்பில் இலக்கிய நிகழ்ச்சி!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காந்தி கலை மன்றம் பி.எஸ்.கே. ருக்மணியம்மாள் கலையரங்கில் வைத்து நாற்று இலக்கிய அமைப்பு சார்பில் வண்ணங்களால் நிரம்பியது உலகம் என்ற தலைப்பில் எழுத்தாளர் பாவண்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கவிஞர் கலாபிரியா தலைமையில் கவிஞர் ஆனந்தி வரவேற்றுப் பேசினார். ஆனந்தாஸ் எம்.பி.ராதாகிருஷ்ணன் நினைவாக எழுத்தாளர் பாவண்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
எழுத்தாளர் நரேந்திர குமார் அறிமுகம் செய்தார். எழுத்தாளர் கன்யூட்ராஜ், எழுத்தாளர் மதுமிதா ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். முடிவில் விருது பெற்ற எழுத்தாளர் பாவண்ணன் விருது பெற்று ஏற்புரை நிகழ்த்தினார். கவிஞர். மா. ரமணி. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்
முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் வருகை தந்து அரங்கம் நிரம்பியது. கூட்டம் சரியான நேரத்திற்கு தொடங்கி குறிப்பிட்ட நேரத்திற்கு முடித்தது குறிப்பிடத்தக்கது.