நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு என்று வாயை திறந்தாலே வயிற்று எரிச்சல் அடைகின்றனர் என சுதா எம் பி பேச்சு.
கும்பகோணம் மற்றும் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் தஞ்சை மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நோயாளிகளின் உதவியாளர்கள் காத்திருப்பு கூடம் மற்றும் டயாலிசிஸ் சிறப்பு வார்டு ரூ.4.38 கோடி மதிப்பீட்டிலும்,ரூ.22.75 லட்சம் பட்டிஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் குடியிருப்பு மற்றும் ரூ.233.60 சிகிச்சை பிரிவு கட்டிடம், ரூ.5.40 கோடி மதிப்பீட்டில் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கதிரியக்க துறைக் கட்டிடம் சிறப்பு சிகிச்சை பிரிவு மற்றும் செவிலியர் ஓய்வு கூடம் கட்டுவதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டி
திறந்து வைத்தார்.
விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,கல்யாணசுந்தரம், எம்.பி, சுதா எம்.பி, அன்பழகன் எம் எல் ஏ துணை மேயர் சுப தமிழழகன் மருத்துவமனை கண்காணிப்பாளர்
கமருல் ஜமான்,நிலைய அதிகாரி பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது விழாவில் பேசிய சுதா எம் பி கூறியதாவது:-
கும்பகோணத்தில் நடைபெற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை வளர்ச்சி திட்ட விழாவில் மக்கள் நலனை சார்ந்து
முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தை
சிறப்பாக்கி வருகிறார்.
கல்வி மற்றும் மருத்துவம் என இரண்டு மகத்தான திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.மருத்துவ சேவைக்கு கல்வி தான் அடிப்படை எனவே தரமான கல்வி கிடைத்தால் தான் நாடு முன்னேறும் ஆனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாரத பிரதமர் மோடி தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை வழங்க வலியுறுத்தினாலும் நாடாளுமன்றத்தில்
தமிழ்நாடு என்று வாயை திறந்தாலே வயிற்று எரிச்சல் அடைகின்றனர் என சுதா எம் பி பேசினார்.
முன்னதாக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு,மருந்துக்கிடங்கு,நோயாளிகள் பிரிவு, மகப்பேறு பிரிவுகளை ஆய்வு செய்தார்.