கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 153 வது பிறந்த நாளை முன்னிட்டு சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழகம் பொதுமக்கள் துறைமுகத்தை பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அருகில் உள்ள மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் துறைமுகத்தில் குவிந்தனர்
அங்கு துறைமுகத்தின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீர் மூழ்கி கப்பல் மற்றும் சரக்கு கப்பல் ஆகிய கப்பல்களை பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் பார்வையிட்டனர் ஆனால் கப்பலுக்கு அருகில் சென்று பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்படவில்லை இதனால் மாணவ மாணவிகள் பொதுமக்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்
என்பது குறிப்பிடத்தக்கது துறைமுக பொறுப்பு கழகம் கப்பல்களை பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தும் அதன் அருகில் செல்வதற்கு மறுக்கப்பட்டதால் பள்ளி மாணவிகள் மிகவும் மன வருத்தத்துடன் தூரத்தில் நின்று கப்பல்களை பார்த்துவிட்டு சென்றனர் பொதுமக்கள் அருகில் செல்வதற்கு ஏன் அனுமதி மறுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது