அரசின் திட்டங்களில் பயனடைந்தவர்களில் சந்தித்து திட்டங்களின் பயன்பாடு மற்றும் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிடும் நிகழ்வான “நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ்” குரும்பலூர் பேரூராட்சி பகுதியில் தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களில் பயனடைந்த கல்லூரி மாணவர்களின் வீடுகளுக்கே சென்று திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதிய திட்டமான ”தமிழ்ப்புதல்வன்” என்ற சிறப்பான திட்டத்தை 09.08.2024 அன்று கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி வைத்தார்கள்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைப் பெருக்குவதிலும் குறிப்பாக இளைஞர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்புகளை உயர்த்துவதற்காகவும் தமிழ்ப்புதல்வன் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ,1000 வழங்கப்படுகிறது. தமிழ்ப்புதல்வன் திட்டத்தால் கல்லூரி செல்லும் மாணவர்களின் உள்ளங்களில் தன்னம்பிக்கையை வளர்க்கப்படுகிறது. கல்வி கற்கும் ஆர்வத்தைப் தூண்டப்படுகிறது. பெற்றோரின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கப்படுகிறது.
இதனால் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தப்படும். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை இந்திய அளவில் மேலும் உயர்த்துகிறது. தமிழ்ப்புதல்வன்” திட்டம் ஒரு உன்னத திட்டமாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் 3,294 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். மாதந்தோறும் மாணவர்களின் அவரவர் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.