அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் உள்ள தனியார் மண்டபத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
மாநில பொறுப்பாளர் செல்லதுரை, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மாவட்ட துணை செயளாலர் வெற்றிகுமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.எம்.சரவணன், ஒன்றிய செயலாளர் முத்துகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் தில்கருப்பு, ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலமுருகன், மாவட்ட தொண்டரணி செயளாலர் கருப்பு துரை, உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.