பொன்னேரி
அழிஞ்சிவாக்கம் ஊராட்சி அரசு பள்ளிக்கு டெசா நிறுவனம் மற்றும் சென்னை குரோம்பேட்டை பகுதி யில் உள்ள ஊருணி அறக்கட்ட ளை இணைந்து 4 லட்சம் மதிப்பி லான நூலக கட்டிட பொருட்கள் வழங்கியது. இதனையடுத்து பள்ளியின் நூலக கட்டிடத்தை டெசா நிறுவன தலைமை மேலாளர் ரஞ்சித் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அழிஞ்சி வாக்கம் ஊராட்சி இந்த ஊராட்சி உள்ள ஜனப்புச்சத்திரம் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.
இப்பள்ளிக்கு சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஊருணி அறக்கட்டளை மற்றும் டெசா நிறுவனமும் இணைந்து பள்ளியில் நூலகம் அமைப்பதற் காக டேபிள், சேர், அலமாரிகள், புத்தகம்,மற்றும் நூலக அறை புதுப்பித்தல் என சுமார் 4 லட்சம் மதிப்பீட்டில் உதவிகள் செய்யப்பட்டனர்.
இதனையடுத்து அழிஞ்சிவாக்கம் ஊராட்சி அரசு பள்ளியில் புதிய தாக அமைக்கப்பட்ட நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் சென்னை குரோம்பேட்டை உருணி அறக்கட்டளை நிறுவனர் ரத்தினவேல் ராஜன், டெசா நிறுவன தலைமை மேலாளர் ரஞ்சித், மேலாளர்கள் ஸ்ரீஜா, செந்தில், மற்றும் சுஷ்மிதா, சோழவரம் வட்டார தொடக்க கல்வி அலுவலர்கள் பால் சுதாகர், முத்துலட்சுமி, பாரதிய ஜனதா கட்சி மாநில அரசு தொடர்பு பிரிவு தலைவர் அழிஞ்சிவாக்கம் பாஸ்கர், பாரதிய ஜனதா கட்சி மாநில அரசு தொடர்பு பிரிவு செயலாளர் அழிஞ்சிவாக்கம் ஆர்.சி பாலாஜி, ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் நந்தினி, மற்றும் வார்டு உறுப்பினர்கள் பள்ளி தலைமையாசிரியர் லட்சுமி, மற்றும் ஆசிரியர் என பலர் கலந்து கொண்டனர்.