வீடு,தொழிற்சாலை மற்றும் வணிகம் தொடர்பான அனைத்து இடங்களிலும் குளிர்சாதன வசதிகள் தொடர்பான சேவைகளை ஒரே கூரையின் கீழ் வழங்கும் வகையில் (Daikin) டெய்கின் நிறுவனத்தின் சொல்யூஷன் பிளாசா கோவையில் முதன் முறையாக துவங்கப்பட்டது…
குளிர்சாதனம் மற்றும் ரெப்ரிஜிரேஷன் தயாரிப்பில் முன்னனி ஜப்பான் நிறுவனமான (Daikin) டெய்கின் இந்திய சந்தையில் பெரும் வரவேற்பை பெற்ற நிறுவனமாக உள்ளது.
தமிழகத்தின் சென்னை உட்பட முக்கிய
நகரங்களில் குளிர்சாதன இயந்திரங்களை விற்பனை செய்து வரும் இந்நிறுவனத்தின் அனைத்து சேவைகள் அடங்கிய டெய்கின் சொல்யூஷன் பிளாசா கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி சாலையில் துவங்கப்பட்டது..
அங்கீகரிக்கப்பட்ட டீலரான எஸ்.எஸ்.
அசோசியேட்ஸ் துவங்கியுள்ள இந்த புதிய மையத்தை டெய்கின் நிறுவனத்தின் தென் மண்டல இயக்குனர் N.K. ராவ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.அசோசியேட்ஸ் நிர்வாக இயக்குனர் சங்கர்,டெய்கின் நிறுவன தமிழ்நாடு மேலாளர் அசோக் ஆகியோர் உடனிருந்தனர்..
டெய்கின் சொல்யூஷன் பிளாசா எனும் இந்த மையத்தி்ல் வீடுகளுக்கான அனைத்து விதமான குளிர்சாதன இயந்திரங்கள்,ஓட்டல்கள்,ஹைபர் மார்க்கெட் போன்ற வணிக தொடர்பான மையங்களுக்கான குளிர் சாதன இயந்திரங்கள்,ஃப்ரீசர்கள்,மற்றும் பெரிய தொழிற்சாலைகளுக்கான குளிர்சாதன பிளாண்டுகள் செய்து கொடுப்பது என அனைத்தும் ஒரே கூரையின் கீழ் வழங்கப்படுகின்றன.
மேலும் குளிர்சாதன இயந்திரங்கள் சர்வீஸ் செய்வது போன்ற பணிகள் என அனைத்து விதமான சேவைகளும் ஒரே கூரையின் வழங்க உள்ளதாக எஸ்.எஸ்.அசோசியேட்ஸ் மையத்தின் நிர்வாக இயக்குனர் சங்கர் தெரிவித்தார்..