நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒருநாள் தலைமையாசிரியை-பள்ளிமாணவி அசத்தல்:-
தென்காசி மாவட்டம்
ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
முழுதும் கிராமப்புற மாணவர்கள் மட்டுமே பயிலும் இப்பள்ளி, கடந்த சில ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது.
இந்த ஆண்டில் நீட் தேர்வில் வெற்றி பெற்று 3 மாணவர் கள் மருத்துப்படிப் பிற்கு தேர்ச்சி பெற்
றுள்ளனர். இந் நிலையில்,இப்பள்ளியில் கல்வி, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் மாண வர்களில் ஒருவரை ஒருநாள் தலைமை ஆசிரியராக பொறுப் பேற்க வைத்து
கெளவுரவப்படுத்த தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முடிவெடுத்தனர்.
5 – மாணவர்கள் தேர்வு செய்யப் பட்டு அவர்களுக்கு
தேர்வு வைக்கப்பட்டு அதில் வெற்றி பெற்ற 12-ம் வகுப்பு மாணவி அனு, ஒரு நாள் தலைமையா சிரியையாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து நேற்று நடந்த காலை பிரார்த்தனை கூட்டத் தில், பள்ளி தலைமையாசிரியர் சங்கர், மாணவி அனுவை, பள்ளியில் பயிலும் மாணவ
மாணவிகளுக்கு ஒருநாள் தலைமை ஆசிரியரை அறிமுகம் செய்தார்.
தொடர்ந்து ஆசிரியர்கள் அனுவுக்கு பொன்னாடை அணி வித்து தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்து சென்று இருக்கையில் அமர வைத்தனர்.
அதன் பின்பு லீவு எடுத்து மாணவர் களின் பெற்றோர் களிடம் உரிய காரணம் கேட்டு அதன பின்னர் மாணவர்களை வகுப்பறைக்கு அனுப்பினார்.
வயிற்று வலி என்று லீவ் கேட்ட மாணவரின் பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் கையொய்பம் பெற்று அனுப்பிதார் . . அதனைதொடர்ந்து
வருப்பறைகளில் நேரிடையாக சென்று பாடம் நடைப்பெறுவதை பார்வையிட்டார்
காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மாணவி அனு அனுபவம் வாய்ந்த தலைமையை ஆசிரியரைப் இருக்கையில் அமர்ந்து செயல்பட்ட ஒரு நாள் தலைமை ஆசிரியர் அனுவுக்கு ஆசிரியர்கள் அவருக்கு இனிப்பு வழங்கி பாராட்டினர்கள் .