தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகில் கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினரும், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான க.மாரிமுத்து கண்டன சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கோ.சக்திவேல், மாவட்ட பொருளாளர் கோ.பாஸ்கர், வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சி.ந்திரகுமார், சோ.பாஸ்கர், வெ.சேவையா, ஆர்.இராமச்சந்திரன், சி.பக்கிரிசாமி, ஏஐடியூசி மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன், மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், மற்றும் மாவட்ட, மாநகர குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய மோடி அரசு பெட்ரோல், டீசல் எரிவாயு விலை உயர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும், அன்றாடம் வாழ்க்கைக்கு தேவையான அரிசி பருப்பு காய்கறிகள் மளிகை உள்ளிட்ட பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும், மின் கட்டண உயர்வு ரத்து செய்ய வேண்டும், ஜி எஸ்டி வரியில் தமிழ்நாட்டுக்குரிய பங்களிப்பை முழுமையாக வழங்க வேண்டும், உரம் உள்ளிட்ட விவசாய இடுபொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு விலைவாசி உயர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முழக்கங்கள் கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டது.