தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் பாரூக் பிசினஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம், ஹாம்லி பிசினஸ் சொல்யூஷன் என்று மறு பெயரிடப்பட்ட அறிமுக விழாவில் நிறுவனர் மற்றும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹம்சவர்தன் மோகன், வாரிய இயக்குனர்கள் நிவேதா ஹம்சவர்தன், மற்றும் விஜயலட்சுமி, மோகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஹம்சவர்தன் மோகன் புதிய நிறுவனத்தின் பெயரை ஹாம்லி பிசினஸ் சொல்யூஷன்ஸ் என்று அறிமுகப்படுத்தினார்.
பின்னர் 2016ம் ஆண்டில் தனது தலைமையின் கீழ் பிபி எஸ் நிறுவனத்தை நிறுவி ஒரு துணிச்சலான முடிவை மேற்கொண்டு. ஒரு ஊழியருடன் தொடங்கிய இந்நிறுவனம் தற்போது 500 க்கும் மேற்பட்ட தொழில் வல்லுனர்களை பணியமர்த்தி விரிவடைந்துள்ளது.
பி பி எஸ் ஐத் தவிர, டி பி எஸ். எல் ஏ ஹெச் பார்ட்னர்ஸ், டி இ பி எல் எக்ஸ்போர்ட்ஸ், பிபி எஸ் இன்பிராஸ்பேஸ், மற்றும் ஆஸ்ட்ரோவின் ஹெல்த் கேர் உள்ளிட்ட பல நிறுவனங்களை நிறுவியுள்ளார்.
இந்தியாவில் தமிழ்நாட்டின் கலாச்சார வளமிக்க நகரமான தஞ்சாவூரை தலைமை இடமாகக் கொண்ட பி பி எஸ் நிறுவனம். கோயம்புத்தூரில் கிளை அலுவலகத்தையும் அமெரிக்கா முழுவதிலும் கூட்டாண்மை வணிக அலுவலகங்களுடன் தனது தொழிலை விரிவு செய்துள்ளார்.
ஹெல்த்கேர் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் மருத்துவ பில்லிங், மக்கள் மேலாண்மை, வணிக மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் இந்நிறுவனம் முக்கிய பங்காற்றியுள்ளது.
தற்போது அறிமுகப் படுத்திய ஹாம்லி பிராண்டின் கீழ் அனைத்து வணிக முயற்சிகளையும் ஒருங்கிணைத்து அதன் உலகளாவிய தடத்தை விரிவு படுத்துவதற்கான நிறுவனத்தின் எதிர்கால இலக்கை பார்க்கும் போது நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூரை அமெரிக்காவின் சிலிக்கான் வேலி போன்று ஆற்றல்மிக்க நகரமாக மாற்ற வேண்டும் என்பதை இலட்சிய இலக்காக கொண்டுள்ளதாகவும். மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.