சி கே ராஜன் 9488471235
கடலூர் மாவட்ட செய்தியாளர்…
கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சுற்றுலா தளத்தை பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்துவது மற்றும் மீன்வளத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பிச்சாவரம் சுற்றுலா தளத்தை பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்துவது மற்றும் மீன்வளத்துறை மூலம் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் தேவைகளை நிறைவு செய்யும் வகையிலும், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது குறித்தும், மேலும் வனத்துறை மூலம் பங்களாத்திட்டு பகுதியில் அலையாத்தி காடுகள் பாதுகாப்பு மையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்வது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, கிள்ளை காப்புக்காடு பகுதியில் அலையாத்தி காடுகள் நேரியல் நடவுப் பணிகளையும் மற்றும் அலையாத்திக் காடுகள் நாற்றாங்காலையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிள்ளை மீனவ கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் நேர்கல் சுவர்கள், மண் அரிமான தடுப்புச்சுவர், மீன் ஏலக்கூடம், வலைப்பின்னும் கூடம், சுகாதார வளாகம் மற்றும் உட்புற சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.40 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் மற்றும் முகத்துவாரம் நிலைப்படுத்தும் பணி நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு
செய்தார்.
புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் நபார்டு – திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி மதிப்பீட்டில் நேர்கல் சுவர்கள், வலைப்பின்னும் கூடம், அணுகு சாலை, அணுகு கால்வாய் ஆழப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் மீன் இறங்குதளம் மற்றும் அணுகு கால்வாய் தூர்வாரும் பணி நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மீன் இறங்குதளம், மீன் வலைபின்னும் கூடம், மீன் ஏலக்கூடம், மீன் உலர்த்தும் தளம், உயர்மின்
கோபுர விளக்குகள் மற்றும் உட்புற சாலை வசதிகள் ஆகிய உட்கட்டமைப்பு பணிகள் சித்திரைப்பேட்டை மற்றும் நஞ்சலிங்கம்பேட்டை மீனவ கிராமங்களில் திட்டத்தின் கீழ் ரூ.7.50 கோடி மதிப்பீட்டிலும்,
சொத்திக்குப்பம் மற்றும் ராசாப்பேட்டை மீனவ கிராமங்களில் திட்டத்தின் கீழ் ரூ.8.50 கோடி மதிப்பீட்டில் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவ்ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன் , சிதம்பரம் சார் ஆட்சியர் செல்வி ரஷ்மி ராணி, மற்றும் சுற்றுலாத்துறை, வனத்துறை, மீன்வளத்துறை
சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.