கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சூரப்ப நாயக்கன் சாவடி கிளை மாநாடு சூரப்ப நாயக்கன் சாவடியில் திருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கோ. மாதவன் கொடியேற்றி வைத்து துவக்க உரையாற்றினார்
கிளை செயலாளர் பன்னீர்செல்வம் வேலை அறிக்கையை வாசித்தார் புதிதாக மீண்டும் கிளை செயலாளராக பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார் மராட்டை நிறைவு செய்து மாநகர செயலாளர் அமர்நாத் உரையாற்றினார்.
சூரப்ப நாயக்கன் சாவடி வசிக்கும் மக்களுக்கு பட்டா இல்லா மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும் திறக்கப்படாமல் உள்ள பொது சுகாதார மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.