சின்னமனூர் அருகே மருத்துவ வசதி இல்லாத மேகமலை தோட்டத் தொழிலாளர்கள் கடும் அவதி தேனி மாவட்டம் சின்னமனூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அமைந்துள்ள மேகமலை பகுதி கிராமங்களில் மருத்துவ வசதிக்காக 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சின்னமனூர் பயணம் செய்ய வேண்டிய அவல நிலை தொடர்வதால் மலை கிராமத்தில் வசிக்கும் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்
நமது முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த மாமேதை அப்துல் கலாம் கூறியது போல என்றைக்கு ஒரு நாட்டில் வசிக்கும் பொதுமக்களுக்கு மருத்துவமும் கல்வியும் அரசு இலவசமாக கொடுத்தால் மட்டுமே அந்த நாடு விரைவில் வல்லரசாகும் என்பது அவருடைய ஆழமான கருத்து ஆனால் சின்னமனூரில் இருந்து கிழக்குப் பகுதியில் மேகமலை உள்ளது
இங்கு ஹைவேவிஸ் மணலாறு வெண்ணியாறு இரவங்கலாறு மகாராஜா மெட்டு உள்ளிட்ட மேகமலை மலை கிராமங்கள் உள்ளன சும்மா 2000 ஏக்கரில் தேயிலை தோட்டங்கள் உள்ளன ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் தேயிலை தோட்டங்களில் பணியாற்றுகின்றனர்
இவர்களை தவிர தனியார் எஸ்டேட் களும் உள்ளன இங்கு வசிக்கும் பொது மக்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லை துணை சுகாதார நிலையம் ஹைவேவிஸ் மற்றும் மகாராஜா மெட்டு பகுதிகளுக்கு இரண்டு இடங்களில் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கப்பட்டுள்ளது
இதில் ஹைவேவிஸ்ல் சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் மகாராஜா மெட்டில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு சொந்தமாக கட்டிடம் இல்லை இரண்டு துணை சுகாதார நிலையங்களுக்கும் இரண்டு கிராம செவிலியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்
அவர்களும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால் சின்னமனூர் நகரில் இருந்து காலையில் வந்து மாலை சென்று விடுகின்றனர் இரவு நேரங்களில் துணை சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் இருப்பதில்லை மலை கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு இரவில் ஏற்படும் பிரசவம் மாரடைப்பு இருதயம் போன்ற உயிர்காக்கும் நோய்கள் வந்தால் அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னமனூர் பயணம் செய்து சிகிச்சைக்கு வர வேண்டும் முதல் உதவி சிகிச்சை அளிக்கக்கூட டாக்டர்கள் இல்லை இதற்குரிய ஆம்புலன்ஸ் வாகன வசதிகளும் கிடையாது
எனவே சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கண்ட இரண்டு துணை சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் செவிலியர்கள் அவசர சிகிச்சைகளுக்கு தேவைப்படும் உபகரணங்களுடன் மருத்துவமனை மேகமலை பகுதியில் அமைக்க வேண்டும் என்று ஏழை எளிய கூலி தோட்டத் தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்