தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் 32 வது வார்டு பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வந்தது. இந்த குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க வேண்டும் நிரந்தரமாக எங்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கரிடம் கோரிக்கை மனு அளித்தனர்
இந்த கோரிக்கையை பரிவுடன் பரிசீலனை செய்த நகர் மன்ற தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை பம்பிங் ஸ்டேஷன் அமைத்து அதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பொத்தானை அமைக் கி திறந்து வைத்தார்
இது குறித்து அந்தப் பகுதி வாடு மக்கள் கூறும் போது எங்கள் கோரிக்கை மனுவை உடனடியாக பரிசீலனை செய்து செய்து எங்களது வார்டில் குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக நீக்கிய நகர் மன்ற தலைவர் துணைத் தலைவர் நகராட்சி ஆணையாளர் கா ராஜலட்சுமி பொறியாளர் வி குணசேகரன் வார்டு உறுப்பினர் மற்றும் ம நகராட்சி அதிகாரிகள் அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்